Home உலகம் கிருஷ்ண குமாரி கோல்ஹி : பாகிஸ்தானின் முதல் இந்து தலித் செனட்டர்!

கிருஷ்ண குமாரி கோல்ஹி : பாகிஸ்தானின் முதல் இந்து தலித் செனட்டர்!

1093
0
SHARE
Ad
கிருஷ்ண குமாரி கோல்ஹி : பாகிஸ்தானின் முதல் இந்து தலித் செனட்டர்

கராச்சி – முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில் முதன் முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்துப் பெண்மணி ஒருவர் செனட்டராக பதவியேற்றிருக்கிறார்.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தைச் சேர்ந்த 39 வயதான கிருஷ்ண குமாரி கோல்ஹி, பிலாவால் பூட்டோ சர்தானி தலைமையேற்றிருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உறுப்பினராவார்.

சிந்து மாநிலத்தில் பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தொகுதியில் நின்று கிருஷ்ணகுமாரி வென்றிருக்கிறார். பாகிஸ்தானில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்து பெண்மணி ஒருவர் முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானில் மாறிவரும் சமூகப் பார்வையையும், பெண்களுக்கான உரிமைகள் வழங்குவது அதிகரித்து வருவதையும் காட்டுவதாகப் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் 2006 முதல் 2012 வரை ரத்னா பகவன்தாஸ் சாவ்லா என்ற இந்துப் பெண்மணி பாகிஸ்தானின் செனட்டராகப் பதவி வகித்திருக்கிறார்.

200 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தானில் 2 விழுக்காட்டினர்