Home இந்தியா “தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார்” – எச்.ராஜா புதிய சர்ச்சை!

“தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார்” – எச்.ராஜா புதிய சர்ச்சை!

1094
0
SHARE
Ad

சென்னை – திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு புதிய கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் திணிக்கப்பட்டது தான் திராவிடம் என்றும், தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று கூறியவர் பெரியார் என்றும் எச்.ராஜா இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

பெரியார் தமிழை சனியன் என்று கூறியதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் எச்.ராஜா குறிப்பிட்டிருக்கிறார்.