வாஷிங்டன் – மியன்மார் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி-க்கு, கடந்த 2012-ம் ஆண்டு, அமெரிக்க ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் வழங்கிய மனித உரிமை விருதான ஏலி விசெல் விருதை, நேற்று புதன்கிழமை அந்த அருங்காட்சியகம் திரும்பப் பெற்றது.
மியன்மாரில் ரோஹின்யா மக்கள் மீது அந்நாட்டு இராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற போது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆங் சான் சூகி அதனைத் தடுக்கவில்லை என்பதால், ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் இம்முடிவை எடுத்திருக்கிறது.