Home நாடு பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்கள் – தேர்தல் ஆணையம் இலக்கு!

பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்கள் – தேர்தல் ஆணையம் இலக்கு!

716
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது மலேசியத் தேர்தல் ஆணையம்.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லா கூறுகையில், “இந்த இலக்கை அடைய நிச்சயமாக எல்லா தரப்பினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. குறிப்பாக ஊடகங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், சில தரப்பினர், வாக்களிக்க வரமாட்டார்கள். அவர்களின் வாக்குகளையும் வீணாக்குவார்கள். அவர்களையும் கணக்கில் கொண்டு தான் இந்த விழுக்காடு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் முகமட் ஹாசிம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice