Home இந்தியா டிடிவி தினகரனின் புதிய கட்சி – மே 15-இல் அறிவிக்கிறார்

டிடிவி தினகரனின் புதிய கட்சி – மே 15-இல் அறிவிக்கிறார்

801
0
SHARE
Ad

சென்னை – அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வந்த டிடிவி தினகரன், அதிமுக கட்சி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்குச் சென்றுவிட்டதைத் தொடர்ந்து தனது புதிய கட்சியை எதிர்வரும் மார்ச் 15-ஆம் தேதி மதுரை மேலூரில் தொடங்குகிறார்.

அவர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது சின்னமாகப் பயன்படுத்திய குக்கர் (சமையல் பாத்திரம்) சின்னத்தையே தினகரன் தொடங்கப்போகும் கட்சிக்கும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதைத் தொடர்ந்து, தனது கட்சி அறிவிப்பை தினகரன் வெளியிட்டிருக்கிறார்.

கமல்ஹாசனும் தனது புதிய கட்சியை மதுரையில் இருந்துதான் தொடக்கினார். அதைத் தொடர்ந்து தினகரனும் மதுரையிலேயே தனது புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice