Home கலை உலகம் விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா!

விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா!

1157
0
SHARE
Ad

சென்னை – விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தான் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெற்றதால், மிகவும் மகிழ்ச்சியடைந்த நடிகர் சூர்யா, விக்னே‌ஷ் சிவனுக்கு சிவப்பு நிற டொயோட்டா கார் ஒன்றைப் பரிசாக அளித்தார்.

சூர்யாவின் இந்த் அன்பினால் இன்ப அதிர்ச்சியடைந்த விக்னேஷ் சிவன், “என்னைப் போன்று வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கு ஒரு மனசு வேண்டும். உங்களின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் தகுதியானவனா என்பது தெரியவில்லை. வாய்ப்பிற்கும், இந்த தரணத்திற்கும் மிக்க நன்றி. யார் என்ன சொன்னாலும் அன்போடு இருப்போம்” என்று சூர்யாவிற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

இதற்கு முன்பு சூர்யா, ‘சிங்கம் 3’ படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிக்கு, டொயோட்டா ஃபார்டியூனர் கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.