Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூர் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தடாலடியாகச் சரிவு!

சிங்கப்பூர் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தடாலடியாகச் சரிவு!

852
0
SHARE
Ad

சிங்கப்பூர் – சிங்கப்பூரில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருக்கிறது.

கடந்த ஆண்டில் மட்டும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 32,000 குறைந்திருக்கிறது.

இது கடந்த 2016-ம் ஆண்டில் குறைந்த 2,500 எண்ணிக்கையை விட 10 மடங்கிற்கும் அதிகமாகும்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு, கடந்த 2002-ம் ஆண்டு, சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தடாலடியாக 43,000 குறைந்தது.

காரணம், அதற்கு முந்தைய ஆண்டு, அமெரிக்காவில் செப்டம்பர் 11, இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது. அதன் பாதிப்பு சிங்கப்பூரிலும் எதிரொலித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு, சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவில் பெரும்பங்கு வகிப்பது, வொர்க் பெர்மிட்டில் பணியாற்றி வந்த கட்டுமானம், கப்பல் துறைமுகப் பணிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், எம்பிளாய்ன்மெண்ட் பாஸ் வைத்திருந்தவர்களிலும் 4,500 பேர் குறைந்திருக்கின்றனர் என்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.