Home இந்தியா அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி

அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி

963
0
SHARE
Ad
கலைஞர் மு.கருணாநிதி (கோப்புப் படம்)

சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் இன்றிரவு சற்று முன்பு திடீரெனப் புறப்பட்டு அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார்.

அவரை அவரது மகனும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் துரை முருகன், பொன்முடி ஆகியோர் முன்னின்று அண்ணா அறிவாலயத்தில் வரவேற்றனர்.

நினைவிழந்த நிலையில் இருக்கும் கருணாநிதிக்குப் பிடித்த இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்றால் அதன் மூலம் அவரது நினைவுகளுக்கும், உடல் நலத்துக்கும் நல்லது என மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் கருணாநிதியை அவரது குடும்பத்தினர் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

அண்ணா அறிவாலயத்தில் கொஞ்ச நேரம் இருந்த பின்னர் கருணாநிதி மீண்டும் தனது கோபாலபுரம் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். கருணாநிதி சுமார் 25 நிமிடங்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்தார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.