Home உலகம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு மீண்டும் இரஷிய அதிபராக விளாடிமிர் புடின்

அடுத்த 6 ஆண்டுகளுக்கு மீண்டும் இரஷிய அதிபராக விளாடிமிர் புடின்

650
0
SHARE
Ad

மாஸ்கோ – இரஷியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிபருக்கான தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மை வாக்குகளில் நடப்பு அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் அடுத்த 6 ஆண்டுகள் தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரஷியா தலையிட்டது என்ற புகார்கள் எழுந்து அதுகுறித்த விசாரணைகள் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் காலகட்டத்தில் இரஷிய அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது.