Home Photo News இன்ஸ்டாகிராம் பதிவுகள்: நீச்சலுடையில் உலக அழகி மனுஷி சில்லார் (படக் காட்சிகள்)

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: நீச்சலுடையில் உலக அழகி மனுஷி சில்லார் (படக் காட்சிகள்)

1320
0
SHARE
Ad

உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே நாளில் உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மனுஷி சில்லார்.

உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மனுஷி சில்லார், புகைப்படங்களுக்கான சமூக வலைத்தளமாகப் புகழ் பெற்றிருக்கும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சிப் படங்களைப் பதிவிட்டு வருகிறார்.

இந்திப் படவுலகிலும் மனுஷி சில்லார் கால் பதிக்கப் போவதாகவும், சல்மான் கானுடன் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

அண்மையில் அவர் நீச்சலுடையில் கவர்ச்சியான தோற்றத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில உங்களின் பார்வைக்கு:

இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களைப் பதிவு செய்வதோடு, உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களிலும் மனுஷி சில்லார் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.

-செல்லியல் தொகுப்பு