Home கலை உலகம் மலேசிய துணை அமைச்சருடன் கே.பாக்யராஜ் சந்திப்பு

மலேசிய துணை அமைச்சருடன் கே.பாக்யராஜ் சந்திப்பு

764
0
SHARE
Ad

bakiyarajகோலாலம்பூர், மார்ச் 27- தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என்றழைக்கப்படுபவர் இயக்குனர் பாக்யராஜ்.

‘3 ஜீனியஸ்’ படப்பிடிப்பிற்காக மலேசியா வந்திருக்கும்  இவர் மரியாதை நிமித்தமாக மலேசிய துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணனனை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது நடிகை பூர்ணிமா பாக்யராஜும் உடனிருந்தார். தமிழ்சினிமா மற்றும் மலேசிய கலைஞர்களின் தமிழ்சினிமா ஆர்வம் ஆகியவை உட்பட பல பொதுவான விவரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர் என திரைப்பட  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

தமிழ் மற்றும் மலாய் மொழியில் உருவாகும் 3 ஜீனியஸ் படம் அறிவியல் சம்பந்தமான கற்பனைக் கதையாகும்.

கோடைகால விடுமுறையில் வெளியிடவுள்ள இப்படம் 3 மலேசிய நண்பர்களுக்கு இடையிலான உறவைச் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.