Home தமிழ் கலைஞர் டிவி தொகுப்பாளினி கீர்த்தியை மணக்கிறார் சாந்தனு!

கலைஞர் டிவி தொகுப்பாளினி கீர்த்தியை மணக்கிறார் சாந்தனு!

618
0
SHARE
Ad

shanthanuசென்னை, ஏப்ரல் 24 – இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும், பிரபல நடிகருமான சாந்தனு, கலைஞர் டிவி தொகுப்பாளினி கீர்த்தியை திருமணம் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு பாக்யராஜ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“அனைவருக்கும் ஒரு இனிய நற்செய்தி. எங்க ‘வீட்ல விசேஷங்க’. ஆம்! எங்கள் புதல்வன் சாந்தனு என்கிற சோனுவிற்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் பெண் சரண்யா, சற்றுப் பொறுத்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டதால், வீட்டில் முதல் திருமணம் சாந்தனுவிற்கு நடக்க உள்ளது”

#TamilSchoolmychoice

“பெண் வீட்டாரும் நமது கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. பிரபல நடனக் கலைஞர் ஜெயந்தி – விஜயகுமார் தம்பதிகளின் மகள் கீர்த்தியே மணமகள். ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் திருமணமும், 22-ம் நாள் மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. விரைவில் அழைப்பிதழுடன் முறைப்படி அனைவரையும் அழைக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.