நடிகர் சந்தானம் முதன் முதலாக மூன்று கதாநாயகர்களுள் ஒருவராக நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’. அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கமே வாயடைத்துப் போனது. அதற்கு காரணம் அந்த படம், இயக்குனர் பாக்யராஜ் இயக்கி கதாநாயகனாக நடித்த ‘இன்று போய் நாளை வா’ படத்தின் அப்பட்டமான மறு வடிவம் என்பதால்.
இந்த விவகாரம் அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கதை திருட்டு தொடர்பாக பாக்யராஜ் நீதிமன்றங்களை நாடினார். அதன் பின்னர் பல்வேறு சமரசங்களுக்குப் பிறகு அந்த பிரச்சனை முடிவிற்கு வந்தது. இந்நிலையில், இனிமே இப்படித்தான் படமும் பாக்யராஜின் படத்தில் இருந்து திருடப்பட்டுள்ளது என்று கூறப்படுவதால் இந்த பிரச்சனை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.