Home உலகம் நடுவானில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் – விமானம் அவசர தரையிறக்கம்!

நடுவானில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் – விமானம் அவசர தரையிறக்கம்!

448
0
SHARE
Ad

United Express,

சிகாகோ, ஏப்ரல் 24 – 75 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஸ்கைவெஸ்ட் (SkyWest) விமானத்தில் காற்றழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர்.

பல பயணிகளை சிரமத்திற்கு உள்ளானார்கள். அந்த விமானம் ஒன்றரை மணி நேரம் வானில் பறந்த நிலையில், திடீரென விமானத்தில் அழுத்தக்குறைவு (Cabin Pressure) ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று பயணிகள் தங்கள் சுயநினைவை இழந்தனர்.

#TamilSchoolmychoice

இந்த நேரத்தில் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் சுழன்று கொண்டே மூன்றே நிமிடங்களில் 10000 அடிக்கு கீழிறங்கியது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்து போனார்கள்.

எனினும் திறமையாக செயல்பட்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். உடனடியாக பப்பல்லோ விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதுடன் இரு குழந்தைகள் மற்றும் 15 பயணிகளின் உடல்நிலை மருத்துவர்களால் சோதனை செய்யப்பட்டது.

இதனால் பப்பல்லோ விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது. இது குறித்து விமானத்தில் சென்ற அவசர உதவி செய்யும் செவிலியர் மேரி கன்னிங்கம் கூறுகையில், “நான் சுயநினைவிழந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்தேன். அப்போது மற்றொருவரும் சுயநினைவை இழந்தார்”.

“மற்ற பயணிகளும் மயக்கம் வருவது போல் உணர்ந்தனர். நானும், விமான பணிப்பெண்ணும் கூட சிரமத்திற்கு உள்ளானோம். இதனால் நான் கீழே உட்கார்ந்து விட்டேன். மூச்சு விட சிரமப்பட்டேன். தலை சுற்றுவது போல் உணர்ந்தேன்” என்று கூறினார்.

விமானத்தில் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம், விமானத்தில் காற்றழுத்த குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என மறைத்தது.

எனினும் 38000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அதில் உள்ள கதவு ஒன்று திறந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதாக இச்சம்பவம் பற்றிய உண்மைகளை அறிந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எனினும் விமானத்தின் கதவு எதுவும் திறக்கப்படவில்லை என்று கூறியுள்ள ஸ்கைவெஸ்ட் விமான நிறுவனம் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளது.