Home வாழ் நலம் காசநோயைக் கட்டுப்படுத்த சில வழிகள்!

காசநோயைக் கட்டுப்படுத்த சில வழிகள்!

815
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_14287531376ஏப்ரல் 24 – காசநோய்க்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகும் கூட உலக அளவில் இந்த நோயின் தாக்கம்  அதிகமாகவே உள்ளது. காரணம், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இன்னமும் பொதுமக்களுக்கு முழுமையாக ஏற்படவில்லை.

தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ‘மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ (Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் காசநோய் வருகிறது.

foodsthatreducearthritisபுகைப்பிடிப்பவர்கள், ஊட்ட சத்துக்குறைவு உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், வறுமையில் வாடும் ஏழைகள், அறியாமையில் உள்ளவர்கள், சர்க்கரை  நோயாளிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள், காசநோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகுபவர்கள்  ஆகியோரை இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது.

#TamilSchoolmychoice

ஒருவருக்குக் காசநோய் உள்ளதா என்பதை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை, சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே போன்றவை உதவும். இவற்றில் சளிப் பரிசோதனை முக்கிய மானது. சளியில் காசநோய்க் கிருமிகள் இருக்குமானால் அது காசநோயை 100 சதவிகிதம் உறுதி செய்யும்.

tuberculosisbodyநவீன மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியால் இன்றைக்கு காசநோயைக் குணப்படுத்த பலதரப்பட்ட மருந்துகள் உள்ளன. ரிஃபாம்பிசின், ஐசோநியசிட்,  எத்தாம்பூட்டால், பைரசினமைடு, ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி மருந்து ஆகிய மருந்துகள் முதல்நிலை காசநோயைக் குணப்படுத்துகின்றன.

இவற்றை நோயின்  ஆரம்பநிலையிலேயே மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு முறைப்படி ஒருநாள்கூட நிறுத்தாமல் சாப்பிட வேண்டியது முக்கியம். இந்தச் சிகிச்சையை மொத்தம் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், காசநோய்  முற்றிலும் குணமாகிவிடும்.

healthyfoodsகாசநோயைப் பொறுத்த வரை சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டியதும் அவசியம். குறிப்பாக, புரத உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். பால்,  முட்டை, பருப்பு, பயறு, ஆட்டுக்கறி, எலும்பு சூப் போன்றவற்றைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அசைவம் சாப்பிடாதவர்கள் பருப்பு மற்றும்  ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். சுகாதாரத்தில் மேம்பட்டுவிட்ட உலக நாடுகள் பலவற்றில் காசநோய் கட்டுப்பட்டுவிட்டது.