Home கலை உலகம் “மனிதநேயத்தின் மறுபக்கம் கமல்” – கமலின் உடற்பயிற்சியாளர் ஒலிம்பியா ஜெய் பேட்டி

“மனிதநேயத்தின் மறுபக்கம் கமல்” – கமலின் உடற்பயிற்சியாளர் ஒலிம்பியா ஜெய் பேட்டி

1232
0
SHARE
Ad

சென்னை, ஏப்ரல் 24 – உலக நாயகன் கமல்ஹாசனின் அசத்தலான உடற்கட்டு பற்றி அனைவரும் அறிந்ததே.

ஆணழகன் போட்டிகளில் கலந்து கொள்ளும் பாடிபில்டர்களைப் போல கட்டுக்கட்டாக தசைகள் இருக்காது. ஆனால் மிரட்டலான அளவில், திரட்சியான தசைகளும், அகன்ற தோள்களுமாக படங்களில் காட்சியளிப்பார்.

கமலின் கட்டுக்கோப்பான உடற்கட்டிற்கு பின்புலமாக இருப்பவர் யார் என்று கேட்டால், ஒட்டுமொத்தமாக ஒருவரை கைகாட்டுகின்றது தமிழக சினிமா.

#TamilSchoolmychoice

11046644_1474831649473668_8987977069204895722_n

அவர் தான் உலக நாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், பிரபல ‘எனர்ஜி’ உடற்கட்டு மாத இதழின் ஆசிரியருமான ஜெயகுமார் (ஒலிம்பியா ஜெய்).

‘சென்னை ஆணழகன்’, ‘தமிழ்நாடு ஆணழகன்’, ‘தென்னிந்திய ஆணழகன்’ உட்பட பல்வேறு ஆணழகன் பட்டங்களை வென்றவர்.

இந்தியாவின் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடங்களில் ஒன்றான திருப்பூரின் எனர்ஜி ஃபிட்னஸ் ஸ்டுடியோவின், ஃபிட்னஸ் டைரக்டராகவும் செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், அண்மையில் பிரபல சினிஉலகம்.காம் இணையதளத்திற்கு ஒலிப்பியா ஜெய் அளித்துள்ள நேர்காணல் நேற்று அதிகாரப்பூர்வமான யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.

அதில், தனக்கு சினிமாவில் தேடி வந்த வாய்ப்புகள், கமலுடனான நட்பு, ‘ஆளவந்தான்’, ‘மருதநாயகம்’ என பல படங்களில் பிரம்மாண்ட உடற்கட்டைக் கொண்டு வர கமல் எடுத்துக் கொண்ட கடுமையான முயற்சிகள் என பல சுவாரஸ்யமான விசயங்களை ஒலிம்பியா ஜெய் பகிர்ந்துள்ளார்.

செய்தி: ஃபீனிக்ஸ்தாசன்

‘சினிஉலகம்’ வெளியிட்டுள்ள ஒலிம்பியா ஜெய்யின் முழுநீள நேர்காணலை இங்கே காணலாம்:-