Home இந்தியா விவசாயி தற்கொலைக்குப் பின் நான் பேசியது தவறு – மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால்!

விவசாயி தற்கொலைக்குப் பின் நான் பேசியது தவறு – மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால்!

619
0
SHARE
Ad

kejriwal466புதுடெல்லி, ஏப்ரல் 24 – விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள போகிறார் என தெரிந்தும் நான் எனது பேச்சை தொடர்ந்து உள்ளேன். நான் தவறு செய்து விட்டேன் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

என்னுடைய பேச்சு ஒருவரின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். சம்பவம் நடைபெற்ற இடத்தில் நான் இருந்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதால், என்னால் தூங்க முடிய வில்லை என்றும் கூறியுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடத்தியது.

#TamilSchoolmychoice

அதில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

farmer-protest-new-delhiஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அசுதோஷ், சஞ்சய் சிங் ஆகியோர் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினர்.

அரவிந்த் கெஜ்ரிவால் பேச இருந்தபோது, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கஜேந்திர சிங் என்ற விவசாயி, திடீரென ஒரு துண்டு காகிதத்தை வீசி விட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

விவசாயிகளின் நிலையை விளக்கும்வகையில் அவர் கோஷங்களை எழுப்பினார். அங்கிருந்த ஒரு வேப்ப மரத்தில் ஏறிய அவர், தனது துண்டின் ஒரு முனையை தனது கழுத்திலும், மற்றொரு முனையை ஒரு மரக்கிளையிலும் கட்டினார்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், அவரை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த மூத்த தலைவர் குமார் விஸ்வாசும், அவரை கீழே இறங்குமாறு கூறினார். அவரை காப்பாற்றுமாறு போலீசாரிடம் வேண்டினார்.

இரண்டு தொண்டர்கள், மரத்தில் ஏறி, விவசாயியின் தற்கொலையை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் அவர் தூக்கில் தொங்கி விட்டார். மேலே ஏறிய தொண்டர்கள், முடிச்சை அவிழ்க்க முயன்றபோது, மரக்கிளை முறிந்து விழுந்தது.

AAPஆம் ஆத்மி தொண்டர்கள், அந்த விவசாயியை மீட்டு, டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், ‘போலீசாருக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டும்‘ என்று கூறினார்.

கூட்டம் முடிவடைந்த பிறகு, தானும், மணீஷ் சிசோடியாவும் மருத்துவமனைக்குச் செல்லப் போவதாக அறிவித்தார். ஆனால் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் விவசாயியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட போது பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்து தொலைவில் இருந்ததால், மேடையில் இருந்த எங்களுக்கு தெரியவில்லை”.

“ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பிய பிறகே விபரீதத்தை உணர்ந்தோம். மரத்தில் இருந்து விவசாயியின் உடல் இறக்கப்பட்டபோது, அவர் உயிருடன் இருக்கிறார் என்றே நினைத்தேன். அவரை ஆம் ஆத்மி கட்சியினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கருதியே பேச தொடங்கினேன்”.

farmer_2381918f_2381950f“சுமார் 10, 15, நிமிடங்கள் பேசிய பிறகே அந்த சூழ்நிலையில் பேசுவது தவறு என்பதை உணர்ந்தேன். அந்த செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். இந்த விவகாரத்தில் டெல்லி போலீசாரை குறைக் கூற முடியாது”.

“விபரீதம் நடக்கப் போவதாக தெரிந்திருந்தால் போலீசார் அதனை தடுத்திருப்பார்கள் என்றார். துயரத்தில் விவசாயி தனது வாழ்க்கையை முடித்து கொண்டது மிக வருத்தமான சம்பவம்”.

“அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூற வார்த்தைகள் கிடையாது” என்று கூறிய்யுள்ள கெஜ்ரிவால், விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.