Home இந்தியா ஐ.பி.எல் சென்னை அணியை ரூ.5 லட்சத்துக்கு விற்ற உரிமையாளர் ஸ்ரீநிவாசன்!

ஐ.பி.எல் சென்னை அணியை ரூ.5 லட்சத்துக்கு விற்ற உரிமையாளர் ஸ்ரீநிவாசன்!

463
0
SHARE
Ad

seeniசென்னை, ஏப்ரல் 24 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெறும்  ரூ.5 லட்சத்திற்கு விற்று பி.சி.சி.ஐ-க்கு வெறும்  ரூ.25 ஆயிரம் மட்டுமே செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.பி.எல். அணிகளின் உரிமையளார்கள் பி.சி.சி.ஐ-யில் பதவியில் இருக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பி.சி.சி.ஐ தலைவராக இருந்த  ஸ்ரீநிவாசன் தனக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கை மாற்றி விடப்பட்டது.

#TamilSchoolmychoice

இனிமேல் அந்த நிறுவனமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்தும் என்றும் ஸ்ரீநிவாசன் தெரிவித்திருந்தார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளின்படி, எந்த ஒரு அணியை விற்பனை செய்தாலும், அந்த அணி விற்பனை செய்யப்படும் போது, அதன் சந்தை மதிப்பில் 5 சதவீதத்தை பி.சி.சி.ஐ-க்கு சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம் அளிக்க வேண்டும்.

அப்படிப்பார்த்தால் சென்னை அணியின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ. 450 கோடி ஆகும். இந்த தொகைக்கு அணி விற்கப்பட்டால் கூட  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 22 கோடி பி.சி.சி.ஐ-க்கு செலுத்தியிருக்க வேண்டும்.

இவ்வளவு தொகையை பி.சி.சி.ஐ-க்கு செலுத்த விரும்பாத இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், தானே உருவாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துக்கு வெறும் 5 லட்ச ரூபாய்க்கு சென்னை அணியை விற்பனை செய்ததாக கணக்கு காட்டி, அதில் 5 சதவீதம் அதாவது 25 ஆயிரம் ரூபாயை பி.சி.சி.ஐ.க்கு செலுத்தப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.