Home இந்தியா கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ச் தனது குழந்தைக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்தார் !

கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ச் தனது குழந்தைக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்தார் !

542
0
SHARE
Ad

jhondy rodes,புதுடெல்லி, ஏப்ரல் 24 – தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்சுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டி அவர் மகிழ்ந்துள்ளார்.

தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி மெலின் ஜெனி நிறை மாத கர்ப்பமாக இருந்தார்.

நேற்று அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மும்பை புறநகர் பகுதியான சான்டா க்ரூசில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

jhondy rodesஅங்கு அவருக்கு நேற்று மதியம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததையடுத்து ஜான்டி ரோட்ஸ் மகிழ்ச்சியில் திளைத்தார்.

அதோடு குழந்தை இந்தியாவில் பிறந்ததால் குழந்தைக்கு ‘இந்தியா’ ஜென்னி ஜான்டி ரோட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கு முன் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டியான் நாஷ் தனது குழந்தைக்கு இந்தியா லில்லி என்று பெயர் சூட்டியிருந்தார்.