Home இந்தியா 4 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடுகிறது மகாராஷ்டிர அரசு!

4 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடுகிறது மகாராஷ்டிர அரசு!

473
0
SHARE
Ad

school-teacherமகாராஷ்டிரா, ஏப்ரல் – மகாராஷ்டிராவில் 4 ஆயிரம் அரசுப்பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 64 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் சுமார் 17 ஆயிரம் பள்ளிகளில் மிக்குறைவான மாணவர்களே படிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சுமார் 4 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் தலா 10-க்கும் குறைவான மாணவர்களே படிப்பதும். 13,400 பள்ளிகளில் தலா 10 முதல் 20 மாணவர்கள் வரை மட்டுமே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்தும் 10-க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள சுமார் 4 ஆயிரம் பள்ளிகளை நடப்பு ஆண்டிலேயே மூடி விட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் மற்றும் சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

மகாராஷ்டிர அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கல்வியாளர்கள் தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாமல் அவற்றை மூடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.