Home நாடு மஇகா வழக்கு: சரவணன் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது!

மஇகா வழக்கு: சரவணன் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது!

502
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 24 – மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், 2009ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவையை மூன்றாம் தரப்பாக (Intervener) அனுமதிக்கக் கோரி மஇகா உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ எம்.சரவணன் மற்றும் கெடாவைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த விண்ணப்பங்கள் மீதான விசாரணை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

m.saravanan1-may7

அதில், டத்தோ எம்.சரவணனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், கெடா ஆனந்தனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஏப்ரல் 15-ம் தேதி மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு, விசாரணைகளுக்குப் பின்னர், எதிர்வரும் மே 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…