புத்ராஜெயா, ஏப்ரல் 24 – மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில், முக்கிய சாட்சியான மறைந்த முன்னாள் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் குடும்பத்தினர், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மற்றும் 7 பேர் மீது தொடுத்திருந்த 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ் செல்வி மற்றும் அவரது மூன்று குழந்தைகளான கிஷன், மேனகா மற்றும் ரீஷி ஆகியோர் தாங்கள் 5 ஆண்டுகள் நாடு கடந்து குடும்பத்தோடு இந்தியாவில் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளியதற்காக இந்த வழக்கை தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கில் நஜிப்பின் சகோதரர்களான ஜோஹாரி அப்துல் ரசாக், நஸிம் அப்துல் ரசாக், மூத்த வழக்கறிஞர் செசில் ஆப்ரஹாம் மற்றும் அவரது மகன் சுனில் ஆப்ரஹாம், தொழிலதிபர் தீபன் ஜெய்கிஷான், சத்தியப்பிரமாண ஆணையர் சைனல் அபிடின் முஹாயாட் மற்றும் வழக்கறிஞர் அருணம்பலம் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு தலா 5,000 ரிங்கிட் வழங்க உத்தரவிட்டுள்ளது.