Home கலை உலகம் இயக்குநர் ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து – பதிலடி தந்த துல்கர் சல்மான்!

இயக்குநர் ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து – பதிலடி தந்த துல்கர் சல்மான்!

566
0
SHARE
Ad

ram-gopal-verma-600சென்னை, ஏப்ரல் 24 – மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘ஓ காதல் கண்மணி’. படத்தை பார்த்த இயக்குநர் ராம் கோபால் வர்மா துல்கரையும், மம்மூட்டியையும் ஒப்பீட்டு டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது; “ஓ காதல் கண்மணி’ படம் பார்த்தேன். விருதுகள் கொடுக்கும் குழுக்கள் மம்மூட்டிக்கு அளித்த விருதுகள் அனைத்தையும் துல்கர் சல்மானுக்கு வாங்கி கொடுக்கவும். துல்கருடன் ஒப்பிடுகையில் மம்மூட்டி வெறும் துணை நடிகர் தான்.”

“மம்மூட்டி அவரது மகன் துல்கர் சல்மானிடம் நடிப்பு கற்றுகொள்ளவேண்டும். அதாவது உண்மையை கற்றுகொள்ள வேண்டும். கேரளா அல்லாத மற்ற சினிமா உலகில் சாதனை படைத்து, கேரளா சினிமாவை பெருமையடையச் செய்துள்ளார் துல்கர். இதை மம்மூட்டி செய்யவில்லை” என கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இது மம்மூட்டியின் ரசிகர்கள் மற்றும் கேரள சினிமா வட்டாரங்கள் என பரபரப்பையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,

துல்கர் சல்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இன்னும் பத்து பிறவி எடுத்தாலும் நடிப்பில் மில்லியனில் ஒரு சதவீதத்தை கூட என் அப்பாவைப் போல் ஈடு கொடுக்க முடியாது” எனக் கூறி ராம் கோபால் வர்மாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.