Home கலை உலகம் இர்பான் கானுக்கு லண்டனில் சிகிச்சை!

இர்பான் கானுக்கு லண்டனில் சிகிச்சை!

848
0
SHARE
Ad

மும்பை – நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பாலிவுட் நடிகர் இர்பான் கான், லண்டனில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவிட்டிருக்கும் இர்பான், “உங்களுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அழகானதும், பயங்கரமானதும். நீங்கள் அவற்றை கடந்து செல்லுங்கள். எந்தவொரு உணர்வும் இறுதியானது அல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் திரைப்படங்கள் வரை சென்று தனது திறமையை வெளிப்படுத்தி வந்த இர்பான் கானுக்கு அண்மையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

பரிசோதனையில் அவருக்கு நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.