Home இந்தியா நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி!

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி!

1113
0
SHARE
Ad

மதுரை – நடிகர் தனுஷுக்கு எதிராக மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி அளித்த மனுவை, மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று கூறி, அத்தம்பதி மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

அவ்வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தனுஷ், தனது தரப்பில் பிறப்புப் பத்திரம், பள்ளிச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அளித்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அந்த ஆவணங்கள் போலியானவை என்று கூறிய அத்தம்பதி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மீண்டும் மனு அளித்தனர்.

அதனை இன்று வெள்ளிக்கிழமை விசாரணை செய்த நீதிமன்றம், அம்மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.