Home இந்தியா ஜெயலலிதா மரணம்: போலீசை விசாரிக்க அனுமதி கேட்டு ஆறுமுகசாமி கடிதம்!

ஜெயலலிதா மரணம்: போலீசை விசாரிக்க அனுமதி கேட்டு ஆறுமுகசாமி கடிதம்!

1811
0
SHARE
Ad

சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எழுந்திருக்கும் சந்தேகங்களைத் தீர்க்க, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகின்றது.

ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், இவ்விசாரணையை மேற்கொண்டு ஆணையத்திடம் ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.