Home இந்தியா இயேசுவை அவமதித்ததாக இளையராஜா மீது போலீஸ் புகார்!

இயேசுவை அவமதித்ததாக இளையராஜா மீது போலீஸ் புகார்!

1289
0
SHARE
Ad

சென்னை – இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசைஞானி இளையராஜா, உலகிலேயே பகவான் ஸ்ரீரமண மகிரிஷிக்கு மட்டும் தான் உயிர்த்து எழுதல் நடந்திருக்கிறது. கிறிஸ்தவ மதத்தில் இயேசு உயிர்த்து எழுந்ததாகக் கூறுவது கட்டுக்கதையென யுடியூப்பில் வெளியிடப்பட்டிருக்கும் சில ஆவணப்படங்கள் வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் காட்டியிருக்கின்றன என்று தெரிவித்தார்.

இளையராஜாவின் இந்தப் பேச்சு கிறிஸ்தவ மக்கள் மத்தியில் சர்ச்சையானது. சிறுபான்மையின மக்கள் கட்சியினர் இளையராஜாவின் வீட்டின் முன் முற்றுகையிட்டு, பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கிறிஸ்தவ நல்லெண அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை இளையராஜா மீது காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது.