Home கலை உலகம் திரைத்துறைக்கென்று தனி வாரியம் – அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு விஷால் நன்றி!

திரைத்துறைக்கென்று தனி வாரியம் – அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு விஷால் நன்றி!

912
0
SHARE
Ad

சென்னை – தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களின் கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனிவாரியம் அமைப்பதை ஏற்றுக் கொண்ட, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் தனது நன்றியினைத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து விஷால் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி & விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். திரைத்துறை சம்பந்தப்பட்ட மற்ற அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புகின்றோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.