Home இந்தியா ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் சடலங்கள் இந்தியா கொண்டுவரப்பட்டன!

ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் சடலங்கள் இந்தியா கொண்டுவரப்பட்டன!

917
0
SHARE
Ad

புதுடெல்லி -கடந்த 2014-ம் ஆண்டு, ஈராக் நாட்டின் மொசூல் நகரில், கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றி வந்த இந்தியப் பிரஜைகள் 39 பேர் திடீரென மாயமாகினர்.

அவர்களை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், அவர்கள் அனைவரும் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சின் முயற்சியில், அவர்களில் 38 பேரின் சடலங்கள் இன்று திங்கட்கிழமை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ.கே.சிங் மொசூல் நகருக்குச் சென்று அங்கிருந்து தனிவிமானத்தில் சடலங்கள் இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

இவ்வழக்கில் அந்நாட்டில் நிலுவையில் இருப்பதால், மீதமுள்ள ஒருவரின் சடலம் இன்னும் இந்தியா கொண்டு வரப்படவில்லை.