Home Photo News டாக்டர் சுப்ரா பிறந்த நாளில் குவிந்த தலைவர்கள்

டாக்டர் சுப்ரா பிறந்த நாளில் குவிந்த தலைவர்கள்

1219
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம், மஇகாவுக்கு எந்தெந்தத் தொகுதிகள், கட்சிக்குக் கிடைக்கக் கூடிய தொகுதிகளில் தேசியத் தலைவரின் ஆசி பெற்ற, அவர் விரல் காட்டப் போகும், வேட்பாளர்கள் யார், என பலப்பல கேள்விகளோடு பரபரப்பான பொதுத்தேர்தல் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்திருக்கும் தருணத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி கடந்து சென்றது மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் 65-வது பிறந்த நாள்.

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 1-ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளின் நெருக்கடியில் டாக்டர் சுப்ரா இருந்த காரணத்தால், அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று திங்கட்கிழமை ஏப்ரல் 2-ஆம் தேதி பிற்பகலில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

நாடு முழுமையிலும் இருந்து பல மஇகா தலைவர்களும், சமூகத் தலைவர்களும் அப்போது திரண்டு வந்து டாக்டர் சுப்ராவுக்குத் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகள்: