Home நாடு ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை!

ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை!

749
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் புகைப்படத்தை, அக்கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

ஜசெக ஒருங்கிணைப்புச் செயலாளர் அந்தோணி லோக் இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், பிரச்சாரத்தின் போது, போட்டியிடும் தொகுதிகளில், அந்தந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணைய அதிகாரிகள் தங்களிடம் கூறியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சங்கங்களின் பதிவிலாகாவில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதால் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் அந்தோணி லோக் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“எங்களின் எதிர்கால பிரதமர் வேட்பாளரின் புகைப்படத்தை நாடெங்கிலும் காட்சிப்படுத்த தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது. இப்படி ஒரு தடையை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கக்கூடாது. நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். எங்களின் தலைவரை மக்களிடம் காட்ட வேண்டும்.

“இது ஒவ்வொரு கட்சியின் உரிமை. இதில் ஏன் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்? இதில் தேர்தல் ஆணையத்திற்கு சம்பந்தமே இல்லை” என அந்தோணி லோக் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.