Home தேர்தல்-14 தேர்தல்-14: இந்தியர்களுக்கு என்ன தரப் போகிறோம்? பக்காத்தான் அறிவிக்கிறது

தேர்தல்-14: இந்தியர்களுக்கு என்ன தரப் போகிறோம்? பக்காத்தான் அறிவிக்கிறது

1370
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – 14-வது பொதுத் தேர்தலில் மலேசிய இந்திய சமுதாயத்திற்குத் தாங்கள் வழங்கப் போகும் தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து நாளை வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்றில் பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவிக்கவிருக்கின்றது.

நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 5-ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு இந்தப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

பக்காத்தானின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அணி திரண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டிருக்கும் பக்காத்தான் தாங்கள் பதவியேற்றவுடன் முதல் 100 நாட்களில் அமுல்படுத்தவிருக்கும் வாக்குறுதிகள் என்ன, தங்களின் ஆட்சிக் காலத்தில் நீண்ட காலத் திட்டமாக அமுல்படுத்தவிருக்கும் வாக்குறுதிகள் என்ன என்பது  குறித்து அந்த அறிக்கையில் விளக்கமாகத் தெரிவித்திருக்கிறது.

எனினும் இந்திய சமுதாயத்திற்கென பிரத்தியேகமாகத் தாங்கள் வழங்கப் போகும் வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து நாளைய பொதுக் கூட்டத்தில் பக்காத்தான் தலைவர்கள் விளக்குவார்கள் எனத் தெரிவிக்கும் முழுப்பக்க விளம்பரம் ஒன்று தமிழ் நாளிதழ் ஒன்றில் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் விளக்க அறிக்கை புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவிருக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நஜிப் அவர்களால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு முன்னதாக பக்காத்தானின் இந்தியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகிறது.

பக்காத்தான் கூட்டணியின் தமிழ் நாளிதழ் விளம்பரம்