Home கலை உலகம் இனி 24 மணி நேரமும் ராகாவின் இசை மழை!

இனி 24 மணி நேரமும் ராகாவின் இசை மழை!

939
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் முன்னணி தமிழ் வானொலி நிலையமான ராகா, இன்று ஏப்ரல் 4-ம் தேதி முதல், 24 மணி நேர ஒலிபரப்பு சேவையாகிறது.

இனி ரசிகர்கள், ராகாவில் ஒலியேறும் நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் கேட்டு மகிழலாம்.

அஸ்ட்ரோ வானொலியின் கீழ் இயங்கி வரும் முன்னணி தமிழ் வானொலி நிலையமான ராகா, 1.4 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ராகா அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, சுரேஷ், ராம், ரேவதி, அகிலா, கவிமாறன், கீதா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்கள் என ராகா அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணி வரை இடைவிடாத பாடல்களை ரசிகர்களுக்காக ராகாவில் ஒலியேறவுள்ளது.

மேல் விவரங்களுக்கு raaga.my அகப்பக்கத்தை நாடுங்கள்.