Home இந்தியா காவிரி விவகாரம்: ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை!

காவிரி விவகாரம்: ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை!

1087
0
SHARE
Ad

சென்னை – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து ஆளுங்கட்சி உட்பட தமிழகத்தின் அரசியல் கட்சிகள், வணிக அமைப்புகள் மற்றும் மாணவர்கள் என பல்வேறு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வித்தியாசமான யோசனை ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“நான் சொல்வது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சிந்தித்து தீர்மானியுங்கள். ஏப்ரல் 10-ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில், சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது.

“அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் மைதானம் காலியாக தெரிந்தால் போதும், சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால் சென்றடைந்துவிட்டும்.

“ஒரு 50,000 பேர் தியாகம் செய்வதால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.

“இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிட வேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை.இது தமிழர்களின் பிரச்னை என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிற மொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும்” என ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.