Home நாடு பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்கிறதா ஆர்ஓஎஸ்?

பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்கிறதா ஆர்ஓஎஸ்?

875
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியின் பதிவை சங்கங்களின் பதிவிலாகா இன்று வியாழக்கிழமை பிற்பகல் இரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

சங்கப்பதிவகச் சட்டம், பிரிவு 14(5)-ன் படி, அறிக்கை  வெளியீடு தொடர்பாக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பெர்சாத்து கட்சியின், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட ஆவணங்களையும், நிதி அறிக்கைகளையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் கட்சியின் பதிவு இரத்து செய்யப்படும் என ஆர்ஓஎஸ் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மேலும் செய்திகள் தொடரும்..