Home நாடு பாசீர் கூடாங்கில் தேர்தல் சின்னத்தை அறிவிக்கிறது ஹராப்பான்!

பாசீர் கூடாங்கில் தேர்தல் சின்னத்தை அறிவிக்கிறது ஹராப்பான்!

937
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அங்கீகரிக்க சங்கங்களின் பதிவிலாகா மறுத்து வருவதால், அதன் சின்னத்தைப் பொதுத்தேர்தலில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, எதிர்கட்சிக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும், ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்தைத் தேர்வு செய்து, அந்த சின்னத்தையே எதிர்கட்சிகளின் சின்னமாக அறிவித்துப் போட்டியிட முடிவெடுத்திருக்கின்றன.

தேர்வு செய்யப்பட்ட சின்னத்தை நாளை வெள்ளிக்கிழமை ஜோகூர் பாசீர் கூடாங்கில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருப்பதாக அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனினும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை, சங்கங்களின் பதிவிலாகா அங்கீகரிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தாங்கள் தொடர்ந்து செய்யவிருப்பதாகவும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளின் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.