Home நாடு தேர்தல் -14: பிகேஆர் சார்பில் ஃபாஹ்மி போட்டியிடுவது உறுதியானது!

தேர்தல் -14: பிகேஆர் சார்பில் ஃபாஹ்மி போட்டியிடுவது உறுதியானது!

1547
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்சில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

எனினும், ஆரூடங்கள் கூறப்பட்டு வருவது போல், லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசாவுக்குப் பதிலாக ஃபாஹ்மி ஃபாட்சில் போட்டியிடுவாரா? என்பது குறித்து பிகேஆர் இப்போதைக்கு மௌனம் காத்து வருகின்றது.

நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஃபாஹ்மி உட்பட 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் சார்பில் போட்டியிடவிருக்கும் 3 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகே, வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என வான் அசிசா தெரிவித்தார்.

கடந்த மார்ச் 29-ம் தேதி, லெம்பா பந்தாய் தொகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா, ஒருவேளை தான் வேறு தொகுதியில் போட்டியிடும் நிலை ஏற்பட்டால், லெம்பா பந்தாய் தொகுதியில் தனக்குப் பதிலாக போட்டியிடத் தகுதி வாய்ந்தவர் ஃபாஹ்மி ஃபாட்சில் தான் என திட்டவட்டமாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.