Home நாடு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது!

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது!

1037
0
SHARE
Ad

Pandikar-Amin Speakerகோலாலம்பூர் – கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றக் கூட்டம், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியோடு ஒத்தி வைக்கப்பட்டது.

அவைத்தலைவர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா, தனது நிறைவு உரையில், கடந்த 20 நாட்களாக ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

“அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் உங்களைச் சந்திப்பேன் என நம்புகின்றேன். நான் ஒருவேளை வேட்பாளராக இல்லாமல் கூட போகலாம். அதிருப்தியை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். யாருக்குத் தெரியும், இடது புறம் அமர்ந்திருப்பவர்களில் (எதிர்க்கட்சியினர்) கூட யாராவது வெற்றி பெறலாம்” என பண்டிகார் அமின் மூலியா நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெறிமுறைகளைப் பின்பற்றவும், அரசியல் வேறுபாடுகளையும் களையவும் பண்டிகார் அறிவுரை கூறினார்.
“பொதுத்தேர்தலில் உங்களில் யாரும் வேட்பாளராகத் தேர்வாகவில்லை என்றால் அதிருப்தியடையாதீர்கள். அரசியலில் அதுவும் ஒரு பகுதி தான்” என்றும் பண்டிகார் கூறினார்.

இந்நிலையில், நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.