Home One Line P1 “இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்!”- பண்டிகார்

“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்!”- பண்டிகார்

903
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல சபா மற்றும் சரவாக் மாநிலத்தில் உள்ள சில நபர்கள் மற்றும் குழுக்கள் ஒவ்வொரு நாளும் கருத்துகளை வெளியிட்டு வருவதாக முன்னாள் மக்களைவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா இன்று செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.

இதுபோன்ற அழைப்புகள் தொடர்ந்தால் மலேசியா ஆபத்தில் சிக்கும் என்றும், தீபகற்பத்தில் பல்வேறு குழுக்களால் இனம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகள் எழுந்தால், அன்வார் இப்ராகிம் மட்டுமே அந்நிலைமையைக் காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறினார். படித்தவர்களைக் கொண்ட இந்த குழுக்கள் இளைய தலைமுறையினரை பாதிக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

உஸ்போ தலைவரான பாண்டிகர் கூறுகையில், சபா, சரவாக் மற்றும் மலாயா இடையேயான ஒற்றுமை நிரந்தரமாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

குறைபாடுகளை எதிர்கொண்ட போதிலும், இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒன்றுமிக்க மலேசியா மீதான தனது நம்பிக்கையில் உறுதியுள்ளவர் என்பதை நிரூபித்த ஒரு தலைவர் நாட்டிற்கு தேவை என்று பண்டிகார் கூறினார். அந்நபர், பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் என்று அவர் குறிப்பிட்டார். 

மலேசியாவைக் காப்பாற்ற அன்வார் சரியான பாதையில் இருப்பதாக தாம் நம்புவதாக அவர் கூறினார். “மிக முக்கியமான விசயம், அனைத்து இனங்களின் ஒற்றுமை, சில இனங்களுக்கு மட்டுமல்ல,” என்று அவர் கூறினார்.