Home கலை உலகம் அமெரிக்க டிவி தொடர்களில் கலக்கி வரும் மலேசிய நடிகை ஷிவா கலைச்செல்வன்!

அமெரிக்க டிவி தொடர்களில் கலக்கி வரும் மலேசிய நடிகை ஷிவா கலைச்செல்வன்!

1522
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பிறந்து, வளர்ந்து இங்கேயே பள்ளிப்படிப்பையும் முடித்தவரான ஷிவா கலைச்செல்வன், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர்களில் தற்போது முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘கோத்தாம்’ என்ற அந்த தொடர், பேட் மேன் உள்ளிட்ட கதாப்பாத்திரங்களைக் கொண்டு இயக்கப்பட்டு வருகின்றது. அதில் ஷிவா வில்லியாக நடித்து வருகின்றார்.

அதே போல், ‘தி ஒரிஜினல்ஸ்’ என்ற மற்றொரு தொடரிலும் ஷிவா நடித்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

“என்னுடைய உணர்வுகளை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. அது மகிழ்ச்சி அல்லது இனிமை எல்லாவற்றையும் தாண்டியது. இந்தத் துறையில், உங்களது கனவுக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும் போது, அவை எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியும். ஆனால் இது அதை விட அதிகம். இந்த அனுபவத்தை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை” என ஷிவா ஸ்டார்2-விடம் தெரிவித்திருக்கிறார்.

ஷிவா நடித்து வரும் இந்தப் புதிய தொடரான கோத்தாமை மலேசியாவிலும் கண்டு ரசிக்கலாம்.
மலேசிய நேரப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9.50 மணியளவில், அஸ்ட்ரோ அலைவரிசை 719 / யுனிஃபை தொலைக்காட்சி அலைவரிசை 451 கோத்தாம் தொடரைக் காணலாம்.