Home நாடு பூலாயில் நூர் ஜஸ்லானை எதிர்த்து சலாஹுடின் ஆயுப் போட்டி!

பூலாயில் நூர் ஜஸ்லானை எதிர்த்து சலாஹுடின் ஆயுப் போட்டி!

820
0
SHARE
Ad

பாசீர் கூடாங் – 14-வது பொதுத்தேர்தலில் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில், அமனா துணைத் தலைவர் சலாஹுடின் அயூப், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பாசீர் கூடாங்கில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில் அமனா தலைவர் முகமது சாபு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பூலாய் தொகுதியின் நடப்பு நடாளுமன்ற உறுப்பினராக துணை உள்துறை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லாம் முகமட் இருக்கிறார்.

#TamilSchoolmychoice

14-வது பொதுத்தேர்தலில் அம்னோ சார்பில், நூர் ஜஸ்லான் மீண்டும் பூலாய் தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து சலாஹுடின் ஆயுப் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.