Home இந்தியா 2 நாட்களாக சிறையில் இருக்கும் சல்மானுக்கு பிணை கிடைக்குமா?

2 நாட்களாக சிறையில் இருக்கும் சல்மானுக்கு பிணை கிடைக்குமா?

844
0
SHARE
Ad

ஜோத்பூர் – மான் வேட்டை வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த வியாழக்கிழமை முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று வெள்ளிக்கிழமை, சல்மான் கானுக்கு பிணை வழங்கும் படி கோரிக்கை விடுத்து, அவரது வழக்கறிஞர் தரப்பு மனு அளித்திருந்தது.

எனினும், ஜோத்பூர் நீதிமன்றம் பிணை மனுவை இன்று சனிக்கிழமை விசாரணை செய்ய முடிவெடுத்தது.

#TamilSchoolmychoice

அதன்படி இன்று காலை அம்மனு மீதான விசாரணை தொடங்குகிறது.

தண்டனைக்கு எதிராக சல்மான் கான் மேல்முறையீடு செய்யவிருப்பதால், அவருக்குப் பிணை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகின்றது.

நீதிபதி மாற்றம்

இதனிடையே, இன்று சனிக்கிழமை சல்மான் கானின் பிணை மனுவை விசாரணை செய்வதாய் அறிவித்த ஜோத்பூர் மாவட்ட, நடுவர் நீதிமன்ற நீதிபதி ரவிந்திர குமார் ஜோஷி, நேற்று இரவோடு இரவாக ராஜஸ்தான் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருக்கிறது.

ரவிந்திர குமார் ஜோஷி உடன் சேர்த்து 82 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது எதேச்சையாக நடந்ததா? அல்லது நடத்தப்பட்டதா? என்பது  உறுதியாகத் தெரியவில்லை.