Home நாடு கலைப் படைப்புகளோடு மின்னலின் மண்ணின் நட்சத்திரம்!

கலைப் படைப்புகளோடு மின்னலின் மண்ணின் நட்சத்திரம்!

664
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மின்னலின் மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சி பிற்பகல் மணி 12 தொடக்கம் மின்னலில் ஒலியேறி வருகிறது.

இந்த வாரம், ‘COVER IT IP’ எனும் இசை நிகழ்ச்சிக்கு குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கோமளா, டனேஷ் மற்றும் பாடகர் சீலன்.

இலைமறை காயாக மக்கள் மத்தியில் இன்னமும் அதிக அளவில் பேசப்படாத இளம் இசைக் கலைஞர்களின் ஒன்றுகூடல் சங்கமமாக இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

#TamilSchoolmychoice

இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிகாட்டும் இந்நிகழ்ச்சி குறித்த தகவலை இன்றைய மண்ணின் நட்சத்திரத்தில் பிற்பகல் மணி 12.30 தொடக்கம் நேயர்கள் கேட்கலாம்.

மலேசிய சிறந்த ஜந்து பாடல்களில், இந்த வார எந்த பாடல் முதல் நிலையில் வரப்போகிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறார் அறிவிப்பாளர் ரவின்.

http://minnalfm.rtm.gov.my/ அகப்பக்கத்தின் வாயிலாக நேயர்களின் விருப்ப பாடல்களுக்கு வாக்களிக்கலாம்.

அதனை தொடர்ந்து, ஆர்டிஎம் 72-ம் ஆண்டு முன்னிட்டு ஆர்டிஎம் வளர்த்த கலைஞர்களில் இன்று புனிதா ராஜாவின் சந்திப்பு இடம்பெறும்.

இசை துறையில் பெண்களும் சாதிக்கவும் ஜொலிக்கவும் முடியும் என்று சொல்லும் புனிதா ராஜா, இவரின் கலையுலகப் பயணம், இசைத்தட்டு வெளீயிடு குறித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இவரோடு மண்ணின் மைந்தன் மலேசியா நிறுவனர் குமரன்,  குறும்படம் மற்றும் இசை காணொளி போட்டி நிகழ்ச்சியை குறித்த தகவல்களை நேயர்களை பகிர்ந்து கொள்ள போகிறார்.

இளைய தலைமுறைகளுக்கு களம் அமைத்து தருவதோடு, அவர்களின் திறமைகளை அடையாளம் காணும் வகையில் இப்போட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சொல்கிறார் மண்ணின் மைந்தன் மலேசியா நிறுவனர் குமரன்.

கலை வட்டார செய்திகள், கலைஞர்களின் படைப்புகளான குறுந்தட்டு வெளியீடு, திரைப்படம் வெளியீடு குறித்த தகவல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனை 03-22887497 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மலேசிய கலைஞர்களின் படைப்புகளோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்” இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.