Home நாடு பிகேஆரில் உறுப்பினர் அல்லாத மகாதீர் அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது எப்படி?

பிகேஆரில் உறுப்பினர் அல்லாத மகாதீர் அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது எப்படி?

890
0
SHARE
Ad
எதிர்கட்சிக் கூட்டணியின் தூண்களான இரு மருத்துவர்கள்.. பிரதமர் வேட்பாளர் துன் மகாதீர், துணைப்பிரதமர் வேட்பாளர் வான் அசிசா

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டிடுவார்கள் என நேற்று வெள்ளிக்கிழமை இரவு பாசீர் கூடாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துன் டாக்டர் மகாதீர் முகமது உட்பட பிகேஆர் கட்சியில் உறுப்பினர் அல்லாதவர்கள், எப்படி பிகேஆர் சின்னத்தில் போட்டியிட முடியும்? என்ற கேள்வி எழுகின்றது.

மலேசிய அரசியலில், ஒரு கட்சியில் உறுப்பினர் அல்லாதவர்கள், பொதுத்தேர்தலில் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது ஒன்று புதிது அல்ல.

#TamilSchoolmychoice

இதற்கு முந்தைய தேர்தல்களில் கூட அவ்வழக்கம் இருந்திருக்கிறது.

அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்கள் அக்கட்சியின் உறுப்பினர் அல்லாத உடன் இணைந்து செயல்படும் வேட்பாளராகக் கருதப்பட்டும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்படுவர்.

அதற்குத் தேவை கட்சித் தலைவரின் அனுமதிக் கடிதம் மட்டுமே. எனவே, பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் அனுமதிக் கடிதத்தோடு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள், பிகேஆர் சின்னத்தில் போட்டியிடவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.