Home நாடு இப்போதைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாது: தேர்தல் ஆணையம்

இப்போதைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாது: தேர்தல் ஆணையம்

726
0
SHARE
Ad
முகமட் ஹாஷிம் அப்துல்லா – மலேசிய தேர்தல் ஆணையத் தலைவர்

கோலாலம்பூர் – சட்டமன்றங்கள் அனைத்தும் கலைந்த பிறகே 14-வது பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா இன்று சனிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தங்களுக்கு இன்னும் அனைத்து சட்டமன்றங்களில் இருந்தும் அதிகாரப்பூர்வக் கடிதங்கள் வரவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி, நாடாளுமன்ற அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவிடமிருந்து நாடாளுமன்றம் இன்று சனிக்கிழமை கலைக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருப்பதாகவும், அதே போல் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பெர்லிஸ் ஆகிய மாநிலங்களின் அவைத்தலைவர்களிடமிருந்து அறிவிப்புகள் வந்திருப்பதாகவும் முகமது ஹாசிம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் முகமது ஹாசிம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

அனைத்து சட்டமன்றங்களும் கலைந்த பிறகு, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.