Home நாடு ஹராப்பான் கூட்டணி பிகேஆர் கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்

ஹராப்பான் கூட்டணி பிகேஆர் கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்

972
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் பட்சத்தில், பிரச்சாரங்களுக்கு பிகேஆர் கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

“தேர்தல் பிரச்சாரங்களின் போது, போட்டியிடும் கட்சிகள் மட்டுமே அதன் சின்னம் பொறித்த கொடியைப் பறக்கவிட வேண்டும்” என தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா இன்று சனிக்கிழமை பிற்பகல் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், கொடிகளை அகற்றுதல், வேறு பிரச்சார பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற தேர்தல் குற்றங்களை, வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் முகமது ஹாசிம் அப்துல்லா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

 

Comments