Home நாடு ரிசல்மான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை – காவல்துறை அறிவிப்பு!

ரிசல்மான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை – காவல்துறை அறிவிப்பு!

887
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பண்டார் துன் ரசாக் தொகுதி அம்னோ தலைவர் டத்தோ ரிசல்மான் மொஹ்தாரின் சிறுநீர் பரிசோதனை முடிவுகளில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என உறுதியாகியிருப்பதாக காவல்துறை கூறியிருக்கிறது.

“கடந்த திங்கட்கிழமை இரவு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ரிசல்மான் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட சிறுநீர் பரிசோதனை முடிவுகளில், மெத்தாம்பெத்தாமின் என்ற போதைப் பொருள் கண்டறியப்பட்டது என்றாலும் கூட, மீண்டும் ஒரு பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பினோம். அங்கு பரிசோதனை முடிவுகளில் ரிசல்மானின் சிறுநீரில் போதைப் பொருள் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது” என கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் மஸ்லான் லாஜிம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த வழக்கு மாநில வழக்கு விசாரணை இயக்குநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அவர் ரிசல்மான் மீது இதற்கு மேல் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை எனக் கூறியிருப்பதாகவும் மஸ்லான் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice