Home இந்தியா சல்மான் கான் 50 ஆயிரம் ரூபாய் ஜாமீனில் விடுதலை

சல்மான் கான் 50 ஆயிரம் ரூபாய் ஜாமீனில் விடுதலை

1034
0
SHARE
Ad
2 நாட்களுக்கு முன்னதாக சிறைக்கு செல்வதற்காகக் காத்திருந்த சல்மான் கான்…

ஜோத்பூர் – அரிய வகை கலைமான்களை வேட்டையாடிக் கொன்ற வழக்கில் கடந்த இரண்டு நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை 50 ஆயிரம் ரூபாய் பிணையில் (ஜாமீன்) வழங்கியது.

இன்று மாலை 7 மணிவாக்கில் சுதந்திர மனிதனாக அவர் மீண்டும் சிறையிலிருந்து வெளியே வருவார் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இனி அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால், நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்றுத்தான் செல்ல முடியும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

#TamilSchoolmychoice

சல்மானின் விடுதலை அறிவிக்கப்பட்டவுடன் அவரது இரசிகர்கள் ஆயிரக்கணக்கில் ஜோத்பூர் நீதிமன்றத்தின் முன்னும், ஜோத்பூர் சிறையின் முன்னும் மும்பையிலுள்ள அவரது இல்லமான கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பு முன்னும் குவியத் தொடங்கினர்.