Home நாடு மூவார் தொகுதியில் சைட் சாதிக் போட்டி

மூவார் தொகுதியில் சைட் சாதிக் போட்டி

1190
0
SHARE
Ad
சைட் சாதிக் – மகாதீர், மொகிதின் ஆகியோருடன் மூவார் கூட்டத்தில்…

மூவார் – பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரும் இளைய சமுதாயத்தினரிடையே பிரபலமாக விளங்கி வரும் சிறந்த பேச்சாளருமான சைட் சாதிக் ஜோகூர் மாநிலத்திலுள்ள மூவார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடுவார் என துன் மகாதீர் அறிவித்தார்.

பெர்சாத்து கட்சியின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் என்ற பெருமையையும் சைட் சாதிக் பெறுகிறார்.

25 வயதே ஆன சைட் சாதிக், நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமையவிருக்கும் புதிய நாடாளுமன்றத்தின் மிக இளைய உறுப்பினராகத் திகழ்வார்.

சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான்
#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டிருந்த பக்காத்தானின் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் துன் மகாதீர் சைட் சாதிக் மூவாரில் போட்டியிடுவதை அறிவித்தார்.

தற்போது அம்னோவின் துணையமைச்சரான ரசாலி பின் இப்ராகிம் மூவார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2013 பொதுத் தேர்தலில் 1,646 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே ரசாலி மூவார் தொகுதியைத் தற்காத்துக் கொண்டார்.

2013-இல் ரசாலிக்கு எதிராக பிகேஆர் போட்டியிட்டது. இந்த முறை மூவார் பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

2013 புள்ளிவிவரங்களின்படி மூவார் தொகுதியில் 62 விழுக்காடு மலாய் வாக்காளர்களும் 35 விழுக்காடு சீன வாக்காளர்களும் இருக்கின்றனர். இந்தியர்கள் 1 விழுக்காடு மட்டுமே இருக்கின்றனர். மற்றவர்கள் 1 விழுக்காட்டில் இருக்கின்றனர்.