Home நாடு சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத்திற்கு பக்காத்தான் வேட்பாளர் சலாஹூடின் அயூப்!

சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத்திற்கு பக்காத்தான் வேட்பாளர் சலாஹூடின் அயூப்!

908
0
SHARE
Ad
சலாஹூடின் அயூப் – அமானா கட்சியின் துணைத் தலைவர்

மூவார் – நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் ஜோகூர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சியின் சார்பில் அதன் துணைத் தலைவர் சலாஹூடின் அயூப் போட்டியிடுவார் என பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் அறிவித்தார்.

ஏற்கனவே, வந்த தகவல்களின்படி சாலாஹூடின் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் உள்துறை துணையமைச்சர் நூர் ஜஸ்லானை எதிர்த்துப் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அவர் சிம்பாங் ரெங்கத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த சலாஹூடின் முன்பு பாஸ் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு, தற்போது அமானா கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் சிம்பாங் ரெங்கம் தொகுதியை தேசிய முன்னணி சார்பில் கெராக்கான் கட்சி வென்று வந்துள்ளது.

2013-இல் கெராக்கான் கட்சியின் லியாங் தெக் மெங் 5,706 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

2013 புள்ளிவிவரங்களின்படி 57 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும் 33 விழுக்காடு சீன வாக்காளர்களையும் கொண்டிருக்கும் சிம்பாங் ரெங்கம் தொகுதியில் 9 விழுக்காடு இந்தியர்கள் இருப்பதால், இந்தத் தொகுதியில் யார் வெற்றியடைவார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக இந்திய வாக்காளர்கள் திகழ்வார்கள் எனக் கருதப்படுகிறது.

மற்ற இன வாக்காளர்கள் ஒரு விழுக்காடு இருக்கின்றனர்.